மும்பை, செப்.29- தேசிய அடையாள அட்டை திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் தெம்ப்லி என்னும் பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதல்வர் அசோக் சவாண், திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா, தேசிய அடையாள அட்டை திட்டத்தின் தலைவர் நந்தன் நீல்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த அடையாள அட்டையை பெற்ற 10 பேரும் தெம்ப்லி பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர்.
"ஏழைகளிடம் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவர்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிவதில்லை. மேலும், ரேஷன் கார்டும் பெற இயலவில்லை. எனவே, சாதாரண மனிதர்களின் நலனுக்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது." என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment