Wednesday, September 29, 2010

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு


 
 
ஜம்மு, செப்.29: காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள பல்வேறு இந்திய ராணுவச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியது.

நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

நேற்று நள்ளிரவு 11.45 மணிக்குத் தொடங்கிய இந்த தாக்குதல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் இன்று காலை 6.30 மணியளவிலும் இந்திய ராணுவச் சாவடிகள் மீது துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட்டுகளை வீசியும், சிறிய ரக பீரங்கிகளாலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பிரிகேடியர் ஜெனரல் எஸ்.துவா தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவித்த அவர், இந்தியப் படைகளும் நிலைகொண்டு, திருப்பித் தாக்கியதாகவும், சுமார் 1 மணி நேரம் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என துவா தெரிவித்தார்.

No comments:

Post a Comment